வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கான மகிழ்ச்சி தகவல்
நாளைய தினம்(31.05.2026) வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 61 சிறைக் கைதிகள் ஜனாதிபதியின் மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
இந்த தகவலை, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ. சி. கஜநாயக்க வெளியிட்டுள்ளார்.
விடுதலையாகும் 61 கைதிகள்
போதைப்பொருள் வர்த்தகம், போதைப் பொருள் பாவனை, திட்டமிட்ட மனிதப் படுகொலை, சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகம், ஆயுதங்களுடன் தொடர்புடைய வழக்குகள் தவிர்ந்த ஏனைய வழக்குகளில சிறைத் தண்டனை பெற்ற கைதிகளில் ஒரு தொகுதியினருக்கே முக்கியமான தினங்களில் இவ்வாறு ஜனாதிபதியின மன்னிப்பு வழங்கப்படுகின்றது.

அதனடிப்படையில், அரசியலமைப்பின் 34வது பிரிவின் கீழ் தமக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு இணங்க, நாளை(31.05.2026) வரும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 61 கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி 61 கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கியுள்ள போதும், நாளைய தினம் 33 கைதிகள் மாத்திரமே சிறைச்சாலைகளில் இருந்து விடுதலை பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
பிரபல நடிகரின் படத்தில் நாயகியாக நடிக்கப்போகும் சீரியல் நடிகை டெல்னா டேவிஸ்... பூஜை போட்டோ.. Cineulagam