ஜப்பானில் இலங்கையருக்கு தொழில் வாய்ப்பு
இந்த வருடத்தில் இலங்கை சுமார் 6,000 தொழிலாளர்களை ஜப்பானுக்கு அனுப்பவுள்ளதாக தொழில்; அமைச்சு தெரிவித்துள்ளது.
பராமரிப்பாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் துறைக்கான தொழிலாளர்களையே ஜப்பானுக்கு அனுப்புவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்காரவின்(Manusha Nanayakkara) பேச்சாளர் சஞ்சய நல்லபெரும தெரிவித்துள்ளார்.
இந்த வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரை 3,223 தொழிலாளர்கள் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
4,518 தொழிலாளர்கள்
2023 இல் 5,647 தொழிலாளர்கள் அனுப்பப்பட்டனர். அத்துடன் 2022 இல் 4,518 தொழிலாளர்கள் அனுப்பப்பட்டதாக நல்லபெரும கூறியுள்ளார்.
ஜப்பானில் திறமையான தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் கிடைப்பதாக தெரிவித்த அவர், திறமையான தொழிலாளிக்கு இலங்கை பெறுமதியில் 5 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உற்பத்தி, மீன்பிடி மற்றும் கட்டுமானத் தொழில்களில் இந்த ஆண்டு 10,000 தொழிலாளர்களை தென் கொரியாவுக்கு அனுப்பவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் நல்லபெரும தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 11 மணி நேரம் முன்

'அன்னை இல்லம்' தற்போதைய மதிப்பு இத்தனை கோடியா.. பிரபுவின் அண்ணனுக்கு கோர்ட் அதிரடி உத்தரவு Cineulagam

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

சன் டிவியில் தமிழ் புத்தாண்டுக்கு வரப்போகும் படம்.. விஜய் டிவிக்கு போட்டியாக அதிரடி அறிவிப்பு Cineulagam

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
