மலையகத்தில் பாதியில் கைவிடப்பட்ட வீடுகளை முடிக்க 600 கோடி ரூபா ஒதுக்கீடு! பிரதியமைச்சர் அறிவிப்பு

Government Of Sri Lanka Central Province Dollars NPP Government
By Rakesh Jun 02, 2026 10:40 AM GMT
Report

கடந்த கால அரசாங்கங்களினால் மலையகப் பகுதிகளில் பாதியில் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்களை முழுமையாகக் கட்டி முடிப்பதற்காக, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வரவு - செலவுத்திட்டத்தில் 600 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

அமைச்சில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

விலை திருத்தம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

அவசர அவசரமாக கட்டப்பட்ட வீடுகள்

"கடந்த காலத்தில் அவசர அவசரமாகக் கட்டப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்ட வீடுகள் பல, வசிப்பதற்குத் தகுதியற்றவையாகக் காணப்படுவதாக மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இது குறித்து உடனடியாக விரிவான விசாரணை நடத்தப்படும்.

மலையகத்தில் பாதியில் கைவிடப்பட்ட வீடுகளை முடிக்க 600 கோடி ரூபா ஒதுக்கீடு! பிரதியமைச்சர் அறிவிப்பு | 600 Crore Allocated Houses Central Province

அதேவேளை, பாதியில் கைவிடப்பட்ட வீடுகளைக் கட்டி முடிப்பதற்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான வீடுகளின் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், இன்னும் ஓரிரு மாதங்களில் அவை உரிய மக்களிடம் ஒப்படைக்கப்படும்.

கடந்த 2022ஆம் ஆண்டு நாட்டில் நிலவிய அத்தியாவசியப் பொருட்கள், மருந்து மற்றும் எரிவாயு தட்டுப்பாடு போன்றதொரு பொருளாதார நெருக்கடி நிலை மீண்டும் ஏற்படும் என எதிர்க்கட்சியினர் பகற்கனவு கண்டனர்.

அத்துடன், மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக மீண்டும் வீதிகளில் இறங்கிப் போராடுவார்கள் எனவும் எதிர்பார்த்தனர். ஆனால், இன்று உலகளாவிய சூழலால் விலையேற்றம் இருந்தாலும், எவ்வித தட்டுப்பாடுமின்றி மக்கள் தங்களுக்குப் தேவையான பொருட்களைப் பெற்று வருகின்றனர்.

கடந்த கால உலகளாவிய நெருக்கடிகளால் 350 ரூபாய் வரை உயர்ந்திருந்த அமெரிக்க டொலரின் மதிப்பு, தற்போதைய அரசாங்கத்தின் முறையான பொருளாதாரக் கொள்கையினால் 325 ரூபாய் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன் மூலம் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டு, எதிர்க்கட்சியினரின் நாசகாரப் பகற்கனவு கலைந்துள்ளது.

வரலாற்றில் முதல் முறையாக  சொந்த நிதியில் நெடுஞ்சாலைப்பணிகள்

அத்துடன், நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டுக் கடன்களின்றி, இலங்கையின் சொந்த நிதியைப் பயன்படுத்தி ரம்புக்கனை - கலவெல அதிவேக நெடுஞ்சாலைப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மலையகத்தில் பாதியில் கைவிடப்பட்ட வீடுகளை முடிக்க 600 கோடி ரூபா ஒதுக்கீடு! பிரதியமைச்சர் அறிவிப்பு | 600 Crore Allocated Houses Central Province

நாட்டின் தனிநபர் வருமானமும் 5,000 அமெரிக்க டொலருக்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளது. எரிபொருள் விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், டீசலுக்கு 100 ரூபாயும், பெற்றோலுக்கு 20 ரூபாயும் அரசாங்கம் மானியமாக வழங்கி வருகின்றது.

இன்று நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும் கூக்குரலிட்டுச் சத்தமிடுபவர்கள் அனைவரும், கடந்த காலத்தில் ஊழல் மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டு நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்பவர்களாவர். அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரிவதைப் போல, சிறைக்குச் செல்லவிருக்கும் இவர்களது சத்தமும் விரைவில் அடங்கிவிடும்.

கடந்த காலத்தில் ஆட்சியைப் பிடிக்கவும், அதனைத் தக்கவைக்கவும் சுயநல அரசியல்வாதிகள் பயன்படுத்திய 'இனவாதம்' இன்று இலங்கையில் முற்றிலும் காலாவதியாகிவிட்டது.

தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவரும் இனவாதத்திற்கு எதிராகவே தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளனர். எனவே, நாட்டைச் சரியான அபிவிருத்திப் பாதைக்குக் கொண்டு செல்வதே எங்களது ஒரே இலக்காகும்." - என்றார்.

கபில சந்திரசேனவின் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருள்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

கபில சந்திரசேனவின் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருள்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

கொழும்பை உலுக்கிய கோர விபத்து - தன்சல் வரிசையில் விபத்தினை ஏற்படுத்திய சாரதி தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பை உலுக்கிய கோர விபத்து - தன்சல் வரிசையில் விபத்தினை ஏற்படுத்திய சாரதி தொடர்பில் வெளியான தகவல்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US