மலையக பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள்: ஒப்பந்தம் கைச்சாத்து
பெருந்தோட்டப் பாடசாலைகளில் 60 ஸ்மார்ட் வகுப்பறைகளை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சகத்தின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா(Santosh Jha) ஆகியோருக்கு இடையே நேற்று(16) இந்த ஒப்பந்தம் கைச்சாத்தானது.
இந்த நாட்டின் பெருந்தோட்ட சமூகத்தில் உள்ள டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் வகுப்பறைகள்
அதன்படி, நுவரெலியா, கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கு இந்த ஸ்மார்ட் வகுப்பறைகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தோட்டப் பாடசாலைகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவது இதன் மற்றொரு நோக்கமாகும்.
இதற்காக இந்திய அரசாங்கம் 508 மில்லியன் ரூபா மானிய உதவியை வழங்கியுள்ளதுடன் இலங்கை அரசாங்கமும் இந்த ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு 115 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 3 மணி நேரம் முன்

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா.. குவியும் வாழ்த்துக்கள் Cineulagam
