நத்தார் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் 6 கைதிகள் விடுதலை(Photos)
நத்தார் தினத்தை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 கைதிகள் இன்று (25.12.2022) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கிறிஸ்தவர்களின் புனித தினங்களில் ஒன்றான நத்தார் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைவாக நாடாளாவிய ரீதியில் 309 கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.
சிறு குற்றச் செயல்கள்
அதற்கமைவாக சிறு குற்றச் செயல்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்தாமை போன்றன காரணமாக வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 6 கைதிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.இந்திரகுமார் மற்றும்
சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த கைதிகளுக்கு ஆலோசனை வழங்கி, கைலாகு கொடுத்து
அவர்களை விடுவித்து வழி அனுப்பி வைத்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 6ஆம் நாள் மாலை திருவிழா



