பரீட்சை மண்டபத்தில் கண்டெடுக்கப்பட்ட உயர்தர பரீட்சை வினாத்தாள் பொதிகள் தொடர்பில் விசாரணை
அம்பலாந்தோட்டையில் உள்ள ஒரு உயர்தர பரீட்சை மையத்தில், நாளை (14) நடைபெறவிருந்த முதல் இயற்பியல் வினாத்தாள் அடங்கிய ஆறு பொதிகள் வினாத்தாள் கொள்கலனில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து கல்வி அமைச்சு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இருப்பினும், வினாத்தாள்கள் அடங்கிய பொதிகள் வெளியிடப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
மற்றொரு பாடத்திற்கான 6 வினாத்தாள்
தற்போது க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அம்பலாந்தோட்டையில் உள்ள ஒரு பாடசாலையில், இன்று நடைபெறும் பாடங்களைத் தவிர, நாளை நடைபெறவிருந்த மற்றொரு பாடத்திற்கான 6 வினாத்தாள் பொதிகள் வினாத்தாள் கொள்கலனில் கண்டெடுக்கப்பட்டடுள்ளது.
நாளை நடைபெறவிருக்கும் இயற்பியல் பாடத்தின் முதல் வினாத்தாள் அடங்கிய ஆறு பொதிகள், இன்று நடைபெற்று வரும் இசை, நடனம் மற்றும் விவசாய விஞ்ஞான பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகள் இருந்த கொள்கலன்களில் கண்டெடுக்கப்பட்டன.
அந்த வலியும், வேதனையும்.. காதல் முறிவு மற்றும் காதலரால் செய்யப்பட்ட துன்புறுத்தல்களை கூறிய நடிகை அனுபமா Cineulagam
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam
ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri