யாழில் 6 கடற்றொழிலாளர்கள் கைது..! சோதனையில் பெறுமதியான பொருட்கள் மீட்பு
யாழில் உழவு இயந்திரத்துடன் ஆறு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை இன்று(04.06.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் சட்ட விரோதமான முறையில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்த ஆறு கடற்றொழிலாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடிப்படை வசதிகளின்றி இயங்கிய இல்லம்..! 12 பேர் உயிர் பலி - பணிப்பாளருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
6 பேர் கைது
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வந்துள்ளன.

இதன் அடிப்படையில், வெற்றிலைக்கேணி கடற்படை மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், கட்டைக்காடு பகுதியில் சட்ட விரோதமான முறையில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்த ஆறு கடற்றொழிலாளர்கள் இரண்டு உழவு இயந்திரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், உழவு இயந்திரம் மற்றும் ஏனைய மீன்பிடி உபகரணங்களுடன் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக யாழ் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம் News Lankasri