மட்டக்களப்பு - காத்தான்குடியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 6 பேர் கைது
மட்டக்களப்பு - காத்தான்குடியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 6 பேரை நேற்று நள்ளிரவில் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று நள்ளிரவு 12 மணியளவில் காத்தான்குடி பகுதியிலுள்ள வீடு ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது ஒரு கிராமும் 10 மில்லிக்கிராமும் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் 6 சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை இன்று மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை தொடர்ச்சியாக நாளாந்தம் போதைப்பொருளுடன் 2 பேருக்கு மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 57 நிமிடங்கள் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan