கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள 6,000 கொள்கலன்கள்: எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானம்
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள 6,000 கொள்கலன்கள் தொடர்பில் இன்றைய தினம் உரிய தீர்வொன்றை வழங்க எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய குறிப்பிட்டுள்ளார்.
சுங்கத்துறை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய 6,000 கொள்கலன்கள் கொழும்புத்துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுங்க நிதியத்தை திறைசேரிக்கு உள்வாங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுங்க அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள்
இதன் காரணமாக 6,000ற்கும் மேற்பட்ட கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளதாக கொள்கலன் சேவை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பிரச்சினைக்கான உரிய தீர்வொன்றை இன்றைய தினத்திற்குள் வழங்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
