பிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவரும் நான்கு குதிரைகளும் பலி
பிரித்தானியாவின் ரென்ஃப்ரூஷயர்(Renfrewshire) பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உட்பட 4 குதிரைகள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த விபத்துச் சம்பவமானது திங்கட்கிழமை(23) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
சட்டத்தால் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டிருந்தாலும் மனங்களிலே ஒன்று பட்டிருக்கிறோம்: தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பு
விபத்துச் சம்பவம்
ரென்ஃப்ரூஷயர் பகுதியின் (Renfrewshire) ஹவ்வுட்(Howwood) அருகே A737 சாலையில் மெர்சிடெஸ் A-Class கார் மற்றும் MAN பாக்ஸ் வேன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மெர்சிடெஸ் காரில் பயணித்த 59 வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் காரில் 52 வயதான ஆண் சாரதி கிளாஸ்கோவின் குயின் எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், 33 வயதான ஆண் பயணி ஒருவர் பைஸ்லியில்(Paisley) உள்ள ராயல் அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதேவேளை, 59 வயதுடைய வான் சாரதி RAH-க்கு மதிப்பீட்டிற்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், வாகன விபத்தில் சிக்கிய 4 குதிரைகள் உயிரிழந்துள்ளதுடன், மீதமுள்ள 2 குதிரைகள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளன.
மேலும், இந்த விபத்தின் முழு சூழ்நிலையையும் ஆராய விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் விசாரணைக்காக விபத்து இடம்பெற்ற சாலை பல மணி நேரம் மூடப்பட்ட, பின்னர் மாலை 2 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.