இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் கனடா விடுத்துள்ள வேண்டுகோள்
இலங்கை பொறுப்புக்கூறல் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கனடா வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கனடா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
கண்மூடித்தனமான கைதுகளிற்கு வழிவகுக்கும் ,சுதந்திரத்தினை கட்டுப்படுத்தும் புதிய சட்டங்கள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக கனடா தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம்
குறிப்பிட்ட சட்டம் சர்வதேச தராதரங்களிற்கு எற்ப காணப்படவேண்டும் என கனடா வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், இலங்கையில் போதியளவு பொறுப்புக்கூறல் இன்மை குறித்து தொடர்ந்தும் கரிசனை கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வருடங்களாக இலங்கை நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நோர்டிக் நாடுகள் சார்பில் உரையாற்றிய பின்லாந்து பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காகவும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலை முடிவிற்கு கொண்டுவருவதற்காகவும் இலங்கை உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரைகளை ஆதரிப்பதாக பின்லாந்து தெரிவித்துள்ளது.
முதலாம் இணைப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ளது.
குறித்த கூட்டத்தொடரில் இன்றையதினம் மதியம் 12.30 மணிக்கு பின்னர் இலங்கை தொடர்பிலான விவாதம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இன்று பிற்பகல் 5 மணிக்கு இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாகக் கலந்துரையாடும் பக்க நிகழ்வும் நடைபெறவுள்ளது.
ஒரு வருட நீடிப்பு
இதனிடையே, இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிய கிடைக்கின்றது.
இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளரின் விரிவான எழுத்துமூல அறிக்கை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டே பிரதான அமர்வில் இன்றையதினம் விவாதம் நடைபெறவுள்ளது.
இலங்கை தொடர்பாக ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தின் ஆயுட்காலம் நிறைவடைகிறது.
எனவே, இது விடயத்தில் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கட்ட நகர்வு தொடர்பிலும் முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
இதனிடையே, ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை கைவிடும்படி இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.
எனினும், தற்போது நாட்டில் தேர்தல் நடப்பதால் மனித உரிமைகள் விவகாரம் அரசியல் மயமாக்கப்பட்டுவிடும் என்றும் மீண்டெழும் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் இலங்கை கூறியுள்ளது.
மேலும், இலங்கை தொடர்பில் புதிய பிரேரணை தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
இதற்கமைய, இலங்கை தொடர்பில் ' இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பில் 51ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீண்டும் ஓராண்டுக்கு நீடிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
