இலங்கையில் கொவிட் தொற்றால் 10 நாட்களில் 531 பேர் மரணம்
கடந்த 10 நாட்டில் இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளாகி 531 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 16ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியல் இந்த மரணங்கள் சம்பவித்ததாக சுகாதார பணிப்பாளர் உறுதி செய்துள்ளார்.
இந்த காலப்பகுதியினுள் 229 பெண்களும் 302 ஆண்களும் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களுக்குள் 30 வயதிற்கும் குறைவான 9 பேரும் அடங்கும். 531 பேரில் 30 - 59 வயதிற்குட்பட்ட 103 பேரும் 60 வயதிற்கு மேற்பட்ட 419 பேரும் உயிரிழந்துள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் சுகாதார தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கமைய கடந்த 21ஆம் திகதி 71 கொவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக சுகாதார பணிப்பாளரினால் உறுதி செய்யப்பட்டுள்ளது. அது இலங்கையில் ஒரே நாளில் பதிவாகிய அதிக கொவிட் மரணங்களாகும்.
இதேவேளை, கடந்த 24 மணித்தியால காலப்பகுதிக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை காரணமாக 361 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri
