கடந்த எட்டு மாதங்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் கைது!
இலங்கையில் கடந்த 8 மாதங்களில் போதைப்பொருள் சார் குற்றங்கள் தொடர்பில் 524 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
22 முதல் 60 வயதுக்கு உட்பட்ட பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது
இதேவேளை, கடந்த 2024 ஆம் ஆண்டு போதைப்பொருள்கள் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் 2 இலட்சத்து 28 ஆயிரம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் தரவுகள் குறிப்பிட்டுள்ளன.
இது, 2023 ஆண்டு காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 41 சதவீத அதிகரிப்பாகும்.
2024இல் 832.3 கிலோ ஹெரோயின், 8 ஆயிரத்து 359 கிலோ கஞ்சா மற்றும் 1,364 கிலோ ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
