நாட்டின் பொதுப் போக்குவரத்து குறித்து அமைச்சரின் அதிர்ச்சி தகவல்
நாட்டின் பிரதான பொதுப் போக்குவரத்து சாதனங்கள் பயன்பாட்டுக்கு உதவாத நிலையில் காணப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 52 வீதமான பேருந்துகளின் பயன்பாட்டு கால எல்லை பூர்த்தியாகியுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார சூழ்நிலை காரணமாக அரசாங்கத்தினால் புதிய பேரூந்துகளை கொள்வனவு செய்ய முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு
மேலும், குறிப்பாக கடன் மறுசீரமைப்பு முனைப்புக்கள் மேற்கொள்ளப்படுவதனால் புதிதாக கடன் பெற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவிடமிருந்து கடன் அடிப்படையில் 500 பேருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டது.
நாட்டின் தொடருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தொடருந்துகளும் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகிறது.
சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தொடருந்து எஞ்சின்களில் பல 50 முதல் 60 ஆண்டுகள் பழமையானவை. பொறியியலாளர்களின் திறமை காரணமாக 50 முதல் 60 ஆண்டுகள் பழமையான என்ஜின்களை பயன்படுத்த முடிகிறது.
தொடருந்து பாதைகளை உரிய கால வரையறைக்குள் மாற்றியமைப்பதற்கும் நிதிப்பற்றாக்குறை காணப்படுவதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |