இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பில் ஐ.நா பேரவையில் இந்தியா கவலை
தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கான அர்ப்பணிப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வில் பேசிய இந்திய பிரதிநிதிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் தொடர்பான கலந்துரையாடலில் பேசிய இந்திய பிரதிநிதிகள் இதனை குறிப்பிட்டுள்ளனர்.
முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்கான உறுதிப்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தால் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
இலங்கையின் அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்த தமது நிலையான பார்வையானது, ஐக்கிய இலங்கையின் கட்டமைப்பிற்குள் அரசியல் தீர்வைக் கொண்டு, அங்கு வாழும் தமிழர்களுக்கு நீதி, அமைதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதாகும் என்று இந்திய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
