வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு பொன்விழா: வவுனியாவில் முக்கிய ஆலோசனைக்கூட்டம்
வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்படவுள்ள 'வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாடு' தொடர்பான மாவட்ட மட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் முக்கிய சந்திப்பு வவுனியாவில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றிருந்தது.
இக்கூட்டத்தில் தமிழர் தாயகத்தின் 8 மாவட்டங்களையும் சேர்ந்த ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்துடன், மாநாட்டிற்கான தீர்மானங்கள், திட்டமிடல்கள் மற்றும் விழிப்புணர்வு செயற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக மே 14, 2026 முதல் மே 14, 2027 வரையான காலப்பகுதி 'வட்டுக்கோட்டைப் பிரகடன பொன்விழா ஆண்டாக' உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுதப்பட்டுள்ளது. மேலும் இப்பொன்விழா ஆண்டின் ஆரம்ப நிகழ்வு மே 14ஆம் திகதி வட்டுக்கோட்டையில் நடைபெறவுள்ளன.
அத்தோடு ஜூன் மாதம் 20ஆம் திகதி (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா கலையரங்கில் பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பிரம்மாண்டமான எழுச்சி மாநாடும் நடைபெறவுள்ளது.
தவத்திரு வேலன் சுவாமிகள் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் அருட்தந்தையர்கள், தமழர் தாயகத்தின் 08 மாவட்டத்தை சேர்ந்த ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan