அமெரிக்கா - ரஷ்யா இடையே அணு ஆயுதப் போர் நடந்தால் 500 கோடி மக்கள் உயிரிழக்கும் அபாயம்
அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே அணு ஆயுதப் போர் நடந்தால் 500 கோடி மக்கள் உயிரிழப்பர் என்று ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் புகழ்பெற்ற ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், 6 வெவ்வேறு அணுசக்தி போர் சூழ்நிலைகளின் விளைவுகளை ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, நேச்சர் ஃபுட் இதழில் அந்த ஆய்வு முடிவுகள் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளன.
அதில் கூறியிருப்பதாவது, அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு முழு அளவிலான அணு ஆயுத மோதல் நடந்தால், மனிதகுலத்தில் பாதிக்கும் மேற்பட்டவர்களை அது அழித்துவிடும்.

அதாவது சுமார் 500 கோடி மக்கள் அந்த போரில் கொல்லப்படுவர். அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான முழு அளவிலான அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் அது உலகளாவிய பஞ்சத்துக்கு வழிவகுக்கும்.
அணுசக்தி போர், காலநிலை மாற்றத்தில் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வெப்பத்தால் ஓசோன் படலமும் அழிந்துவிடும். சிறிய அளவிலான மோதல் கூட உலகளாவிய உணவு உற்பத்தியில் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ளூர்மயமாக்கப்பட்ட போரில் பயிர் விளைச்சல் 5 ஆண்டுகளுக்குள் 7 வீதம் குறையும். அதே நேரத்தில் அமெரிக்கா-ரஷ்யா இடையே போர் ஏற்பட்டால் 3 முதல் 4 ஆண்டுகளில் உற்பத்தி 90 வீதம் குறையும் என கூறப்பட்டுள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 11 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri