கடவுசீட்டுகளை பெற்றுக்கொள்ள இலகுவான வழிமுறை
கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக 50 பிராந்திய மையங்களை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது வவுனியா, குருநாகல், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய நான்கு பிராந்திய அலுவலகங்களிலும் கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்திலும் கடவுச்சீட்டு வழங்கும் பணி மேற்கொள்ளப்படுகின்றது.
50 புதிய நிலையங்கள்
கடவுச்சீட்டு வழங்கும் பணியை வினைத்திறனாக்க பிரதேச செயலகங்களில் மேலும் 50 புதிய நிலையங்கள் ஸ்தாபிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

எந்தவொரு விண்ணப்பதாரரும் குறித்த அலுவலகங்களிற்கு சென்று தமது சுயவிபரம், கைவிரல் அடையாளம் மற்றும் புகைப்படங்களைக் கொடுத்து, அவர்களது கடவுச்சீட்டை அவர்களின் வீட்டில் வைத்து பெற்றுக்கொள்ளலாம்.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விண்ணப்பதாரரின் சுயவிபரம் உள்ளடக்கிய இலத்திரனியல் கடவுச்சீட்டை அறிமுகப்படுத்தவுள்ளதுடன் அது உலகின் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 21 மணி நேரம் முன்
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam