ஹரிணிக்கு எதிரான பிரேரணையில் 50 இற்கும் மேற்பட்டோர் கையொப்பம்
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராகக் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில், இதுவரை எதிர்க்கட்சியைச் சேர்ந்த சுமார் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் பல உறுப்பினர்கள் கையொப்பமிடவுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாச தலைமையில் நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம்(7) இந்த கையொப்பமிடும் நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
நம்பிக்கையில்லாப் பிரேரணை
இந்தப் பிரேரணை இன்று(9.1.2026) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசின் கல்விச் சீர்திருத்தங்கள் காரணமாக பிள்ளைகளின் கல்வியில் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதாகக் கூறி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.
அத்துடன், தற்போதைய கல்விப் பாடத்திட்ட மாற்றங்கள் மற்றும் நிர்வாகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியே எதிர்க்கட்சிகள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன என்றும் கயந்த கருணாதிலக மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.