கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
கொழும்பு ஹோட்டல் ஒன்றில் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 50 இலட்சம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளது.
கொள்ளுப்பிட்டியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த வர்த்தகர் மது அருந்தியிருந்த நிலையில், இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பணத்தை திருடிவிட்டு தப்பிச் சென்ற முறைப்பாட்டாளரான வர்த்தகரும் அவரது நண்பரும் பாடசாலையில் இருந்தே நண்பர்களாக இருந்தவர்களாகும்.
ஹோட்டல் அறை
வாகனம் ஒன்றை வாங்குவதற்காக வந்த இருவரும் ஹோட்டல் அறையில் மது அருந்தியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வர்த்தக நண்பர், அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் தூங்கியதையடுத்து சந்தேகநபர் பணத்துடன் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முறைப்பாடு செய்த வர்த்தகர் கஹவ பகுதியை சேர்ந்தவர் எனவும், தப்பிச் சென்ற சந்தேகநபர் கொஸ்கொட பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.எல்.துஷ்மந்தவின் பணிப்புரைக்கமைய, குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலையத் தளபதி பொலிஸ் பரிசோதகர் மனதுங்க உள்ளிட்ட குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 18 மணி நேரம் முன்

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

விக்ரம் ரோலக்ஸ் போல் கூலி படத்தில் சர்ப்ரைஸ் ஹீரோ கேமியோ.. மிரட்ட வரும் முன்னணி நடிகர்? யார் தெரியுமா Cineulagam
