மன்னாரில் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு(Video)
மன்னார் மாவட்டத்தில் மாண்டஸ் சூறாவளியின் தாக்கம் காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 184 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் கே.திலீபன் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் வியாழக்கிழமை (08) இரவு மாண்டஸ் சூறாவளியின் தாக்கத்தால் மன்னார் , நானாட்டான், மாந்தை மேற்கு, மடு ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள கிராமங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
மீன்பிடி வலைகள் இழப்பு
மீன்பிடி வலைகள் கடல் நீரில் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போய் உள்ளன. இதன் காரணமாக மன்னார் மாவட்டத்தில் 50 குடும்பங்களைச் சார்ந்த 184 நபர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளனர்.
11 வீடுகள், ஒரு சிறு வியாபார குடிசை மற்றும் கடை சேதமடைந்துள்ளது. 100க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமாகியுள்ளன.
மீன்பிடி படகுகள் பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளது. அத்துடன் 10 மீன்பிடி வலைகள் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உள்ளது. 7 படகு சேதமடைந்துள்ளது. பல ஏக்கர் விவசாய செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு
கடந்த 08.12.22 தொடக்கம் 09.12.22 வரையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மண்டோஸ் புயலின் தாக்கத்தினால் 311 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலக புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 82 குடும்பங்களைசேர்ந்த 256 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு வீடு முழுமையாக சோதமடைந்துள்ளதுடன் 39 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மாந்தை கிழக்கு பிரதேசத்தில் 21 குடும்பங்களை சேர்ந்த 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் 21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 105 குடும்பங்களை சேர்ந்த 364 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் 105 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 68 குடும்பங்களை சேர்ந்த 228 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 68 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
துணக்காய் பிரதேசத்தில் 14 குடும்பங்களை சேர்ந்த 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 14 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
வெலிஓயா பிரதேசத்தில் 21 கடும்பங்களை சேர்ந்த 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் குளிர் காரணமாக மக்களின் வாழ்வாதாரமாக காணப்பட்ட கால்நடைகள் பல உயிரிழந்துள்ளன.
விபரங்கள்
இதன் விபரங்கள் திரட்டும்நடவடிக்கையில் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றார்கள் கால்நடை பண்ணையாளர்கள் சரியான தகவல்களை வழங்காத காரணத்தினால் சரியான புள்ளிவிபரங்கள் கிடைக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் மின்சாரம் தடைப்பட்டு தொலைபேசி இணைப்புக்களும் துண்டிக்க்பபட்ட காரணத்தினால் பல பண்ணையாளர்கள் இறந்த கால்நடைகளை புதைத்துள்ளார்கள்.
அந்தவகையில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 48 கால்நடைகள் உயிரிழந்துள்ளதுடன் 21 கால்நடைகள் கடுமையாக பதிக்கப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 40 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக
தெரியவந்துள்ளது.
இதனை விட செம்மலை,குமுழமுனை,களிக்காடு,முள்ளியவளை,
மன்னாகண்டல்,முத்தையன்கட்டு, பகுதிகளில் மக்களின் ஆடுகள்,மாடுகள்,கோழிகள்
என்பன உயிரிழந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளார்கள்.








பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
