மீண்டும் தலைதூக்கிய சட்டவிரோத சுருக்குவலை தொழில்:கடற்தொழிலாளர்கள் கவலை(Photos)
வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் சட்டவிரோத சுருக்குவலை தொழில் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
அண்மைக்காலமாக கட்டைக்காடு கடற்தொழிலாளர்கள் கடல்வளத்தை அழித்துவருவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட நிலையில் தொடர்ந்தும் 400 இற்கும் மேற்பட்ட படகுகள் சுருக்குவலை தொழிலுக்காக ஆழக்கடலுக்கு விரைந்து கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
சட்டவிரோத தொழிலுக்கு முடிவு

நீரியல்வளத்துறையினரால் அடிக்கடி எச்சரிக்கப்பட்ட போதும் அப்பகுதி கடற்தொழிலாளர்கள் குறித்த தொழிலை கைவிடாமல் தொடர்ந்து மேற்கொள்கின்றார்கள்.
இதனால் சிறு தொழிலாளர்கள் வாழ்வதற்கு வழி இன்றி மிகவும் சிரமப்படுவதாக அப்பகுதி கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக குறித்த சட்டவிரோத தொழிலுக்கு முடிவு எடுக்க கடற்றொழில் அமைச்சரும் கட்டைக்காடு மீனவ சங்கமுமே இதற்கு பொறுப்பென அப்பகுதி கடற்தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
எனினும் சில நாட்களுக்கு முன்பு சுருக்குவலை தொழிலில் ஈடுபட வேண்டாம் என அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளமை குறுப்பிடத்தக்கது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 7 மணி நேரம் முன்
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்