பொலிஸ் சேவைக்கு தகுதியில்லா ஐயாயிரம் பேர் கடமையில் உள்ளதாக தகவல்
நாட்டில் பொலிஸ் சேவைக்குத் தகுதியில்லாத ஐயாயிரம் பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள மற்றும் உடல் ஆரோக்கிய காரணிகளின் அடிப்படையில் ஓய்வுறுத்தப்பட வேண்டிய சுமார் ஐயாயிரம் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறானவர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள காரணத்தினால் பொலிஸ் திணைக்களத்தின் ஒழுக்க நெறிகளைப் பேணுவதில் சிக்கல்கள் உருவாகியுள்ளது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பல்வேறு பயங்கரவாத செயற்பாடுகளினால் உபாதைகளுக்கு உள்ளான 537 பேரும், வேறும் பொலிஸ் பணிகளில் ஈடுபட்ட போது நோய்வாய்ப்பட்ட 1305 பேரும், தொற்றா நோய்களினால் பாதிக்கப்பட்ட 2699 பேரும், உளவியல் ஆரோக்கியப் பிரச்சினைகள் காரணமாக இலகு பணிகளில் அமர்த்தப்பட்டுள்ள 411 உத்தியோகத்தர்களும் இந்த ஐயாயிரம் என்ற எண்ணிக்கையில் உள்ளடங்குகின்றனர்.
இவ்வாறு ஆரோக்கிய குறைபாடுகள் உடைய உத்தியோகத்தர்களை ஓய்வுறுத்தி அவர்களுக்குப் பதிலீடாக புதிய உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் மொத்தமாக 85000 பேர் கடமையாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நான்கு சக பொலிஸ் உத்தியோகத்தர்களை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் மாலை திருவிழா



