மட்டக்களப்பில் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு 79580 குடும்பங்களுக்கு வழங்கி வைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு கடந்த 3 தினங்களான இதுவரையில் 79580 குடும்பங்களுக்கு 39 கோடியே 79 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாக இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் கோவிட் தொற்று காரணமாகப் போக்குவரத்து பயணக்கட்டுபாடு விதிக்கப்பட்டதையடுத்து வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற மக்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கத் தீர்மானிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.
அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை வரையில் கடந்த
மூன்று தினங்களில் 79580 குடும்பங்களுக்கு 39 கோடியே 79 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சீரியலில் இருந்து வெளியேறிய சஞ்சீவ் கயல் சீரியலுக்காக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam