இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்
தமிழகம் தனுஷ்கோடிக்கு மேலும் ஏழு இலங்கை தமிழர்கள் நேற்று வந்தடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியினால் இந்தியாவுக்கு வந்து தமிழகம் மண்டபம் புனர்வாழ்வு மையத்தில் வசிப்பவர்களின் மொத்த எண்ணிக்கை 245 ஆக உயர்ந்துள்ளது.
முல்லைத்தீவைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களை சேர்ந்தவர்களே நேற்று தனுஷ்கோடிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இந்தியா செல்வதற்காக படகுக்காக சுமார் நான்கு லட்சம் ரூபாயை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் உதவி
தனுஷ்கோடியின் தீவு ஒன்றில் இறக்கிவிடப்பட்ட இவர்களை இந்திய கரையோரக் காவல்துறையினர் கரைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு தமிழக மாநில அரசு தங்குமிடம், உணவு மற்றும் தினசரி உதவித்தொகையை வழங்கி வருகின்றது.
அதேநேரம் அவர்களின் நடமாட்டங்களை மத்திய மற்றும் மாநில உளவுத்துறை அமைப்புகள்
அவதானித்து வருகின்றன.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
