ஒரு மணி நேரத்திற்கு 5 கொரோனா மரணங்கள்
டெல்டா திரிபு மிக வேகமாக பரவுவதன் காரணமாக நாளுக்கு நாள் மிகவும் பயங்கரமான நிலைமையை நோக்கி சென்றுக்கொண்டிருப்பதால், உடனடியாக நாட்டை முடக்குமாறு தொடர்ந்தும் வலியுறுத்தி வந்ததாக அரச வைத்திய அதிகாரிகளின் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
தற்போது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த கொரோனா வைரஸ் தொற்று 5 உயிர்களை பலியெடுத்து வருகிறது. கடும் தீர்மானங்களை எடுத்து இந்த நிலைமையை கட்டுப்படுத்தவில்லை என்ற எதிர்காலத்தில் நிலைமை மிகவும் பயங்கரமானதாக இருக்கும்.
பொருளாதாரம் என்ற பெயரில் நாட்டை முடக்கும் தீர்மானத்தை எடுப்பதற்கு தாமதிக்கும் அனைத்து தினங்களிலும் டெல்டா திரிபு நாடு முழுவதும் மிக வேகமாக பரவி நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பை மேலும் மோசமான நிலைமைக்கு கொண்டு செல்லும்.
அத்துடன் டெல்டா திரிபு அதிகளவில் பரவி வருவதன் காரணமாக அது மேலும் திரிபடைந்து வலுவடையக் கூடும் என விசேட நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதனால், மேலும் திரிபடைந்த திரிபுகள் உருவாக தேவையான சூழலை நாட்டில் ஏற்படுத்தி, கோவிட் தொற்று நோய் நெருக்கடிகையில் இருந்துநெருக்கடிக்கு செல்ல இடமளித்தமைக்கான பொறுப்பை தீர்மானத்தை எடுக்க தாமதிக்கும் அனைவரும் ஏற்கவேண்டும். தற்போது வைத்தியசாலைகளில் ஒக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகிறது.
இதனால், நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஒக்சிஜன் முடிவுறும் அளவுக்கு வந்துள்ளதாக தெரியவருகிறது.
ஒக்சிஜனை இறக்குமதி செய்யும் தேவை ஏற்பட்டால், அது பொருளாதாரத்திற்கு மேலதிக சுமையாக இருக்கும்.
தற்போது நாம் எதிர்நோக்கும் இந்த உலக தொற்று நோய் நிலைமையை எதிர்கொள்ள உலகில் ஏனைய நாடுகள் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து திறந்த மனதுடன் பார்ப்பது அவசியமானது.
தொற்று சமூக வைத்திய பிரிவுகளின் அறிவியல் முறை ஊடாக வைரஸ் பரவலை கட்டுப்படுவதற்கு பதிலாக அறியவிலற்ற விடயங்களை காரணமாக காட்டுவது இந்த நிலைமையை மேலும் வியாகுலப்படுத்தும் என அரச வைத்திய அதிகாரிகளின் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.