யாழில் 5.4 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் வீதியின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்(Photos)
வட்டுக்கோட்டை-பொன்னாலை வீதியின் புனரமைப்பு பணிகள் 5.4 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் நேற்று (04.11.2022) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம்-காரைநகர் பேருந்து வழித்தடத்தை புனரமைப்பது தொடர்பாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் கவனத்துக்கு நேரடியாகவும், கடிதம் ஊடாகவும் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
EHIJFG
இந்நிலையில், மோசமாக பாதிக்கப்பட்டிருந்த வட்டுக்கோட்டை - பொன்னாலை வீதியினை மேம்படுத்தும் நோக்கில் 5.4 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துள்ளன.
பந்துல யாழ்ப்பாணத்துக்கு விஜயம்
கடந்த 20.08.2022 யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் பந்துல குணவர்த்தன, காரைநகர் டிப்போவுக்கு சென்றுள்ளார்.
அதன்போது யாழ்ப்பாணம் - காரைநகர் வீதி, மற்றும் காரைநகர் டிப்போவுக்கு செல்லும் வீதி என்பன புனரமைக்கப்பட வேண்டிய அவசியத்தை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, 10.09.2022 அன்று இவ்விடயம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்துமாறு அமைச்சரிடம் கடிதம் மூலமாகவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.






16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 18 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
