கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகு அனர்த்தத்தின் 4ஆம் ஆண்டு நினைவு தினம்
இலங்கை வரலாற்றில் ஒரு கறுப்பு தினமாகப் பதிவான கிண்ணியா - குறிஞ்சாக்கேணி படகு அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன்( 23) நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்றன.
2021ஆம் ஆண்டு, நவம்பர் 23ஆம் திகதி காலை 7:10 மணியளவில் நடந்த இந்தத் துயரச் சம்பவம், பல உயிர்களைப் பலியெடுத்ததுடன் கிண்ணியா மட்டுமல்ல முழு நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியது.
நான்காவது வருட நினைவு தினம்
துயரச் சம்பவம் மற்றும் பலியானோர் குறிஞ்சாக்கேணி கரையில் இருந்து சேவையில் ஈடுபட்டிருந்த படகு கவிழ்ந்த இந்த விபத்தில், அதில் பயணித்த 15 மாணவர்களும் 8 பொதுமக்களும் பெரும் அனர்த்தத்திற்கு உள்ளாகினர்.
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மாணவிகள், ஒரு கர்ப்பிணித் தாயும் அவரது மகளும், அத்துடன் தாயும் மகனும் உட்பட எட்டு உயிர்கள் பலியெடுக்கப்பட்டன.

அனர்த்தத்தில் சிக்கிய 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததுடன், உடல் மற்றும் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாலத்தின் மீள் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட போது, போக்குவரத்துக்காகப் பிரயாணிகளுக்காக மாற்று வழியாக, தனியாருக்கு சொந்தமான ஒரு படகு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சரியான பரிசோதனை நடவடிக்கைகள் எதுவும் இன்றி இந்த படகு சேவை ஆரம்பிக்கப்பட்டதனாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டது என அப்போது பலராலும் குற்றம் சாட்டப்பட்டது.
குறிஞ்சாக்கேணி படகு அனர்த்தம்
இந்த அனர்த்தம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போதிலும், அதன் தீர்ப்பு இன்னமும் கிடைக்கவில்லை. இந்த நிலையிலே இன்றைய தினம் நான்காவது வருட நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
அனர்த்தத்தின் நான்காம் வருட நினைவு தினம் இன்று குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் சமய அனுஷ்டானங்களுடன் அனுஷ்டிக்கப்பட்டது.

கிண்ணியா பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, பிரதேச செயலாளர் எம். எச். எம். கனி தலைமையில் நடைபெற்றது. இதில் மரணம் அடைந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
குறிஞ்சாக்கேணி மக்கள் எதிர்நோக்கிய பெரும் சிரமத்திற்கு நிரந்தரத் தீர்வாக அமையும் பாலத்தை நிர்மாணிக்கும் பணிகள், அனர்த்தம் நிகழ்ந்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய அரசாங்கத்தின் காலத்தில், இந்த வருடம்தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பால நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, பொதுமக்கள் பயணம் செய்வதற்காக, முறையான, ஆபத்தில்லாத படகு சேவை ஒன்றை, வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திராவினால் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
துயரச் சம்பவங்கள்
இந்தச் சேவை எதிர்வரும் புதன்கிழமை (நவம்பர் 26) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
காலதாமதமாக ஆரம்பிக்கப்பட்டாலும், இந்தப் பாலம் எதிர்காலத்தில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் என்ற நம்பிக்கையை மக்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு புதிய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை குறித்து மக்கள் மகிழ்ச்சியும் தெரிவிக்கின்றனர்.
குறிஞ்சாக்கேணி மக்கள் தமது அன்புக்குரியவர்களை இழந்து வாடும் இந்த நான்காம் ஆண்டு நிறைவில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி மற்றும் இழப்பீடு விரைந்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
அவர்களின் துயரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், எதிர்காலத்தில் இத்தகைய தவறுகள் நிகழாமல் தடுக்கவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.



Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
முறைத்துக்கொண்டு நின்ற பிரஜன், Chair தூக்கிப்போட்டு விஜய் சேதுபதி அதிரடி- பிக்பாஸ் 9 புரொமோ Cineulagam
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam