சேதன பசளை உற்பத்திக்காக தனியார் ஒருவரினால் 49 ஏக்கர் நிலம் கோரப்பட்டுள்ளது! (PHOTOS)

Sri Lanka Mullaitivu Land Farmers Private
By Independent Writer Dec 21, 2021 09:34 AM GMT
Report

முல்லைத்தீவு மாவட்டத்தில் சேதன பசளையினை உற்பத்தி செய்வதற்காக தனியார் ஒருவர் 49 ஏக்கர் நிலத்தினை கோரியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயத்திற்கு தேவையான சேதன பசளை உற்பத்தி தொடர்பிலான விவசாய திணைக்களம் மற்றும் மாவட்டசெயலக அதிகாரிகள், கமநலசேவை நிலைய அதிகாரிகள், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் மற்றும் படைத்துறை அதிகாரிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று (20) கேப்பாபிலவுவில் உள்ள 59 ஆவது படைத்தலைமையகத்தில் நடைபெற்றுள்ளது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் பசுமை விவசாயத்தினை ஊக்குவிக்கும் நோக்குடன் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பசுமை விவசாயத்தினை முல்லைத்தீவு மாவட்டத்தில் விருத்தி செய்யும் நோக்கில் கமநலசேவை நிலையங்கள் மற்றும் விவசாய திணைக்களங்கள்,மாவட்ட செயலகம் ஊடாக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த முயற்சியில் படையினரின் பங்கும் பெரும் முக்கியமாக காணப்படுகின்றது அவர்கள் தங்கள் முகாம்களில் சேதன பசளை செய்கையினை மேற்கொண்டு வருகின்றார்கள் கிராமங்களில் விசாயிகளும் உற்பத்தி செய்து வருகின்றார்கள்.

தனிப்பட்டவர்களும் சிறிய மற்றும் நடுத்தரளவிலான பசளை உற்பத்தியினை மேற்கொண்டு வருகின்றார்கள். தனியார்கள் சேதன பசளை உற்பத்திற்காக பாரியளவிலான முயற்சியினை மேற்கொண்டுள்ளார்கள்.

அதற்கான நிலத்தினையும் கோரியுள்ளார்கள் மாந்தைகிழக்கில் தனியார் ஒருவர் 49 ஏக்கர் நிலத்தினை சேதன வளமாக்கிகளை உற்பத்தி செய்வதற்காக கோரியுள்ளார்.

இந்த அரசாங்கத்தின் முயற்சி வெற்றியளிப்பதற்கு தனியார்கள் முன்வந்து சேதனை உற்பத்தியினை மேற்கொள்ளும் போது மாவட்டத்திற்கு தேவையான உரத்தினை பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் இதன்போது தெரிவித்துள்ளார்.

குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட முல்லைத்தீவு மாவட்ட விவசாய பணிப்பாளர் ஆர்.கோகுலதாசன் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அண்ணளவாக 25ஆயிரம் மெற்றிக்தொன் கூட்டெரு தேவையாக உள்ளது.

இவற்றை உற்பத்தி செய்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் போதியதாக இல்லை குறைந்தளவில் உற்பத்தி செய்யப்படுகின்றது அதனை பாரியளவில் உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கா படையினரின் ஏற்பாட்டில் சந்தித்து கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.


GalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US