பரபரப்பாகும் தென்னிலங்கை - சிக்கப் போகும் 488 மோசடியாளர்கள்
சர்ச்சைக்குரிய 488 கோப்புகள் குறித்து விசாரணைகளை இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணைக்குழு ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயர் பதவியில் உள்ள அரசியல்வாதிகள், முன்னாள் மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட பிற நபர்கள் தொடர்பான விசாரணைகளே இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த முறைப்பாடு ஜனாதிபதி செயலகம், பல்வேறு அமைச்சுகள் மற்றும் இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணையத்திற்கு நேரடியாக கிடைத்துள்ளதென தகவல் வெளியாகியுள்ளது.
மூத்த அதிகாரிகள்
அவற்றில் சிலவற்றிற்கு சட்டமா அதிபரின் உதவியும் பெறப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விசாரணைகளுக்கு இலஞ்ச ஊழல் மற்றும் ஒழிப்பு ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

பூதாகரமாகும் செம்மணி விவகாரம்! தவிக்கும் தமிழ் உறவுகள் 6 மணி நேரம் முன்

மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ரித்திஷ்.. எல்லை மீறிய இனியா- ஆகாஷ்.. கொதிப்பில் குடும்பத்தினர் Manithan

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri
