ரியூனியனில் இருந்து நாடு கடத்தப்பட்ட 46 இலங்கையர்கள்
சட்டவிரோதமாக கடல் வழியாக பிரான்ஸ் நாட்டுக்கு சொந்தமான ரீயூனியன் தீவில் தஞ்சமடைய முயற்சித்த போது கைது செய்யப்பட்ட 46 இலங்கையர்கள், விமானம் மூலம் அங்கிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் புறப்பட்டவர்கள்
இவர்கள் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாம் 2 ஆம் திகதி நீர்கொழும்பில் இருந்து ஆழ்கடல் மீன்பிடி படகில் ஏறி புறப்பட்டு ரியூனியன் தீவில் தஞ்சமடைய முயற்சித்த போது ஆழ்கடல் மீன்பிடி படகின் பணியாளர்களுடன் 43 ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு சிறுவன் என 46 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி இவர்கள் ரியூனியன் தீவுக்குள் செல்ல முயற்சித்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், யாழ்ப்பாண்ம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு பிரதேசங்களை சேர்ந்த 13 முதல் 53 வயதுக்கு உட்பட்டவர்கள்.
lemoniteur.fr
ரியூனியன் தீவில் இருந்து நேற்று விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள், மேலதிக விசாரணைகளுக்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நபர்களை சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துள்ள தெஹிவளையை சேர்ந்த நபர், ஒருவரிடம் 2 லட்சம் ரூபா முதல் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை அறவிட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
ஏமாற்றும் நபர்களிடம் சிக்க வேண்டாம்-கடற்படை கோரிக்கை
மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இப்படியான நபர்கள் மேற்கொண்டு வரும் சட்டவிரோத ஆட்கடத்தல் வியாபாரத்தில் சிக்கி, வெளிநாடு செல்ல முயற்சித்து பணத்தை விரயமாகுதல் மற்றும் சட்டத்திற்கு முன்னர் குற்றவாளியாக மாறுவதை தவிர்க்குமாறும் கடற்படையினர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு அனுமதியின்றி குடியேற்றவாசிகள் ரியூனியன் தீவுக்குள் நுழைய பிரான்ஸ் அரசாங்கம் எவ்வித அனுசரணையையும் வழங்காது எனவும் அவர்கள் கைது செய்யப்பட்டு உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
