ஆப்கானிஸ்தானிலிருந்து 46 இலங்கையர்கள் வெளியேற்றம்!
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அங்கிருந்து ஏராளமானோர் வெளியேறி வருகின்றனர்.
அந்த வகையில் இலங்கையும் அங்கிருக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வரும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானிலுள்ள 86 இலங்கையர்களில் 46 பேர் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
மேலும், 20 பேர் இலங்கை வர எதிர்பாத்துள்ளதோடு, 20 பேர் அங்கேயே தங்கி இருக்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேற விரும்பினால், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இந்தியா, பாகிஸ்தான் அரசாங்கங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு வெளிநாட்டு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை உறுதிப்படுத்துமாறும், ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து மக்களினதும் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தைப் பாதுகாக்குமாறும் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
