யாழ்.மாவட்டத்தில் காலநிலை தாக்கத்தின் காரணமாக 71 குடும்பங்கள் பாதிப்பு
யாழ் மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை தாக்கத்தின் காரணமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 241 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த மாவட்ட பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் வீசிய கடும் காற்று காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை தாக்கத்தின் காரணமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 241 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு இதில் சிறுமி ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.
கடுங்காற்றின் தாக்கத்தின் காரணமாக வேலனைப் பிரதேசத்தில் இரண்டு வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதோடு, ஏனைய பிரதேச செயலர் பிரிவில் 60 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
முதலாம் இணைப்பு
யாழ். மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை தாக்கத்தின் காரணமாக 46 குடும்பங்களைச் சேர்ந்த 172 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த மாவட்ட பிரிவின் உதவிப்பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் யாழ்ப்பாணத்தில் வீசிய கடும் காற்று காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்டத்தில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை தாக்கத்தின் காரணமாக 46 குடும்பங்களைச் சேர்ந்த 172 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, இதில் சிறுமி ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கடுங்காற்றின் தாக்கத்தின் காரணமாக இரண்டு வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதோடு, 42 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.அத்துடன் சிறு தொழில் முயற்சியாளர்கள் ஐந்து பேர் காற்றின் தாக்கத்தின் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பாதிப்புக்கள் தொடர்பில் அனைத்து விவரங்களும் புதிய பிரதேச செயலகங்கள் ஊடாக சேகரிக்கப்பட்டு மத்திய அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வேலணை, காரைநகர், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில்
அதிகளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam