நீர்க் கட்டணத்தை செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகை
நீர்க் கட்டணத்தை செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகை வழங்க நீர் விநியோக அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
தற்பொழுது நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 45 பேர் நீர்க் கட்டணங்களை செலுத்த தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளாக இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீர்க் கட்டணங்களை செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கட்டணத் தொகையில் குறைந்தபட்சம் ஐம்பது வீதத்தையேனும் செலுத்தி முடிப்பதற்கு சலுகைக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாத காலம் இவ்வாறு சலுகைக் காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உடன் அமுலுக்கு வரும் வகையில் கட்டணங்கள் செலுத்தப்பட வேண்டுமெனவும் அவ்வாறு செலுத்த தவறினால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகள், ஓய்வூதியக் கொடுப்பனவுங்களில் அறவீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், கட்டணம் செலுத்தாத அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கட்டணத்தை அறவீடு செய்வது குறித்த அமைச்சரவை பத்திரமொன்று ஆயத்தப்படுத்தப்பட்டு வருவதாக நீர்விநியோக அமைச்சு தெரிவித்துள்ளது.

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
