பாகிஸ்தானில் 45 பெண்களை பாடசாலை அதிபர் பாலியல் வன்புணர்விற்கு
உட்படுத்தினார்
என தெரிவித்து இரண்டு பெண்கள் சாட்சியம் அளிக்க முன்வந்துள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் கராச்சி - குல்ஷான்-இ-ஹதீத் நகரில் உள்ள தனியார்
பாடசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் கைதான பாடசாலை அதிபர், நீதிபதி ரம்ஷா நவைத் முன் முற்படுத்தப்பட்ட நிலையில்
மேற்படி இரண்டு பெண்களும் சாட்சியம் அளித்தனர்.
குறித்த அதிபர் வேலை தருகிறேன் என தெரிவித்து பாடசாலைக்கு பெண்களை அழைத்து, கட்டாயப்படுத்தி அவர்களை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக குறித்த
இரண்டு பெண்களும் நீதிமன்றில் சாட்சியம் அளித்துள்ளனர்.
மேலும் குறித்த பாடசாலை அதிபருக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு
பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தி உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகிறது இன்றைய காலை நேர பிரதான செய்திகள்...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
|