நாட்டின் பல்வேறு பகுதிகளில் 435 கொலை சம்பவங்கள் பதிவு
இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் 435 கொலைகள் இடம்பெற்றுள்ளன.
இவற்றில் துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் மாத்திரம் 36 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த வருடத்தின் முதல் ஒன்பது மாதங்களில் 32 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பொலிஸில் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் பதிவான கொலைகளின் எண்ணிக்கை
இந்த துப்பாக்கிச்சூட்டில் 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 17 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டில் பதிவான கொலைகளின் எண்ணிக்கை 521 என்றும், அதில் 403 கொலைகள் 2021 முதல் ஒன்பது மாதங்களுக்குள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், போதைப்பொருள் சம்பந்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களால் இந்த ஆண்டு
கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தல்துவ தெரிவித்துள்ளார்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 18 மணி நேரம் முன்
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri