விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட அரசாங்கம்
சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்துள்ள மிளகு, கோப்பி மற்றும் ஏலக்காய் பயிர்ச் செய்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
விவசாயிகளுக்கு சலுகைகள் அறிவிப்பு
ஏற்றுமதி விவசாயத் துறையின் பொருளாதார முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு விவசாயிகளுக்குப் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, பாதிக்கப்பட்ட பயிர்களை மீளச் செய்கை பண்ணும் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு உயர்ந்தபட்சம் 425,000 ரூபா கொடுப்பனவை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், புதிதாக நடுகை செய்வதற்கும் மற்றும் மீள்நடுகைக்கும் தேவையான நாற்றுக்கள் மற்றும் கன்றுகளை ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் ஊடாக இலவசமாக வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தவுள்ள தாழமுக்கம்! வடக்கு - கிழக்கிற்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை