இந்தியா – இலங்கை மன்றத்தின் 41ஆவது பணிப்பாளர் சபைக்கூட்டம்! புதிய திட்ட முன்மொழிவுகளுக்கும் அனுமதி
இந்தியா – இலங்கை மன்றத்தின் (India–Sri Lanka Foundation – ISLF) 41ஆவது பணிப்பாளர் சபை கூட்டம் 2026 ஆகஸ்ட் 28 ஆம் திகதி புதுடில்லியில் நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்திற்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலோன்ன ஆகியோர் இணைத்தலைமை வகித்துள்ளனர்.
புதிய திட்ட முன்மொழிவுகள்
அறக்கட்டளையின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான அம்பாசடர் மோகன் குமார், அம்பாசடர் பிரசாத் கரியவாசம் மற்றும் அசோக் மாலிக் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
தொடரும் திட்டங்களின் முன்னேற்றம் மீளாய்வு கூட்டத்தில், தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பணிப்பாளர் சபை மீளாய்வு செய்ததுடன், அறக்கட்டளையின் செயலகத்திற்கு கிடைக்கப்பெற்ற பல்வேறு புதிய திட்ட முன்மொழிவுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வரலாறு மற்றும் கலாசாரம், கல்வி, சுகாதாரம், சுற்றுச்சூழல், விவசாயம், பெண்கள் தொடர்பான ஆய்வுகள் மற்றும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இளம் ஊடகவியலாளர்களின் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், இளங்கலை மாணவர்களுக்கான பரிமாற்றத் திட்டங்கள், தேயிலைத் துறையில் பெண்களின் வலுவூட்டல் மற்றும் உயிரியல் ரீதியாக சிதைவடையக்கூடிய சுகாதாரத் துவாய்கள் தயாரிப்பு தொடர்பான திட்டங்கள், நூல் மொழிபெயர்ப்பு மற்றும் வெளியீட்டுத் திட்டங்கள், நடனப் பயிற்சி நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான அறிவை மேம்படுத்தும் திட்டங்கள், காரணம் கண்டறியப்படாத நீண்டகால சிறுநீரக நோய் (CKDu) தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அறிவுப் பரிமாற்றத் திட்டங்கள், செயற்கை உறுப்புகள் மற்றும் உடல் இயக்க உதவி உபகரணங்கள் தயாரிப்பு தொடர்பான அறிவுப் பரிமாற்றங்கள், கடல்சார் முகாமைத்துவம் மற்றும் உளவியல் நல்வாழ்வு தொடர்பான கல்விசார் ஒத்துழைப்புத் திட்டங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வெனிசுலாவின் மொத்த எண்ணெய் வளத்தையும் கைப்பற்றும் அமெரிக்கா... ட்ரம்பின் புதிய ஒப்பந்தம் News Lankasri
நேபாளத்தில் பெரு வெள்ளம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய 8 வயது சிறுவன்: மகனை தேடி அலைந்த தாய் News Lankasri