திருகோணமலையில் 24 மணித்தியாலத்திற்குள் 40 பேருக்கு கோவிட் தொற்று உறுதி!
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 40 கோவிட் நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருகோணமலை பொது வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த உயிரிழப்பு இன்று (31) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை- கந்தசாமி கோயில் வீதியில் வசித்து வந்த 61வயது உடையவர் எனவும் தெரியவருகின்றது.
கடந்த 27ஆம் திகதி சுகவீனமுற்ற நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 25 ஆண்களும், 15 பெண்களும் நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலையில் 40க்கும் மேற்பட்ட நோயாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் 15 வைத்தியசாலை ஊழியர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
மேலும் திருகோணமலை மாவட்டத்தில் நாளுக்குநாள் தொற்றாளர்களின் வீதம் அதிகரித்து வருவதினால் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் முகக்கவசங்கள் அணிந்து சுகாதார வழிமுறைகளைப் பின்வருமாறும் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை சுகாதார வைத்திய அதிகாரிகளின் போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று
வருவதால் தொற்றாளர்களின் சரியான விபரங்கள் இப்பதியில் தாமதம்
ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.





தவெக கேட்ட இடத்தில் அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் விளக்கம் News Lankasri

குக் வித் கோமாளி டைட்டில் ஜெயித்தது இவர்தான்.. மொத்த ஷோவும் ஸ்கிரிப்ட் தானா? ராஜூ விளக்கம் Cineulagam
