வவுனியாவில் இடம்பெற்ற கைகலப்பு காரணமாக 3 பெண்கள் உட்பட 4 பேர் வைத்தியசாலையில் அனுமதி
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் காணி தகராறு காரணமாக ஏற்பட்ட கைகலப்பில் மூன்று பெண்கள் உட்பட 4 பேர் காயமடைந்து வவுனியா வைமத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, கூமாங்குளம், முருகையா குளத்திற்திற்கு செல்லும் வீதியில் குடும்பம் ஒன்று வசித்து வரும் காணிக்குள் நுழைந்து அடாத்தாக கொட்டகை ஒன்றை போடுவதற்கு சிலர் முயன்றுள்ளனர்.
இதனை குறித்த காணியில் வசித்து வந்தோர் தடுத்து நிறுத்த முற்பட்ட போது வாய்தர்க்கம் ஏற்பட்டதுடன், தடுக்க சென்றவர்கள் மீது அங்கு வந்தவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த தாக்குதலில் தாய், பிள்ளைகள் என மூன்று பெண்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த காணி தொடர்பில் கடந்த சில மாதங்களாக ஒருவர் பிணக்கில் ஈடுபட்டதாகவும், அவருக்கு ஆதரவாக வருகை தந்த சிலர் அத்துமீறி கொட்டகை அமைக்க முயன்றதுடன், தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
