வெல்லாவெளி பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி! 4 பேர் கைது (Photos)
மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 4 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (07.08.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், 200 லீற்றர் கோடா, 50 லீற்றர் கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்தி உபகரணங்களை மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் அதிகரித்து வரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனைகள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து நேற்றைய தினம் நெல்லிக்காட்டு பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து இரு மோட்டார் சைக்கிளில் கசிப்பு உற்பத்திக்கு கலன்களில் 140 லீற்றர் கோடாவை கடத்திச் சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் இருவர் மோட்டார் சைக்கிளில் கலனில் கொண்டு சென்ற கோடா மற்றும் கையடக்க தொலைபேசி என்பனவற்றையும் கைவிட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.
இந்த இருவேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் இன்று (08.08.2023) நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri