அமெரிக்காவில் இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் 4 பேருக்கு முக்கிய பதவி
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் முக்கிய குழுக்களில் இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எம்.பி.க்களான ராஜா கிருஷ்ணமூர்த்தி (49), அமி பெரா (57) , பிரமிளா ஜெயபால் (57 ), ரோ கன்னா (46) ஆகியோரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில், ராஜா கிருஷ்ணமூர்த்தி, சீனாவின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள குழுவின் உயா்நிலை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதிநிதிகள் சபையின் புலனாய்வு
சீனாவின் நடத்தையின் பல்வேறு அம்சங்கள், அமெரிக்காவுக்கும், உலகத்துக்கும் சீனாவின் அச்சுறுத்தல்கள் குறித்த விவகாரங்களை இந்தக் குழு கவனிக்கும்.
அமி பெரா, முக்கியத்துவம் வாய்ந்த பிரதிநிதிகள் சபையின் புலனாய்வு குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தக் குழு மத்திய புலனாய்வு அமைப்பு (சி.ஐ.ஏ), தேசிய புலனாய்வு இயக்குநரின் அலுவலகம் (டி.என்.ஐ), தேசிய பாதுகாப்பு முகமை (என்.எஸ்.ஏ) மற்றும் இராணுவ உளவுத்துறை உள்ளிட்ட நாட்டின் உளவுத்துறை அமைப்பின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்யும்.
பிரமிளா ஜெயபால், பிரதிநிதிகள் சபையின் நீதித்துறை குழுவின் உறுப்பினராக (குடியேற்றம்) நியமிக்கப்பட்டுள்ளார்.
குடியேற்ற துணைக்குழுவுக்கு இவர் தலைமைத்தாங்குவார். ரோகன்னா, சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனான அமெரிக்காவின் பொருளாதாரம், தொழில்நுட்பம், பாதுகாப்பு போட்டி தொடர்பான புதிய குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர்கள் 4 பேரும் அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 10 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri