இலங்கையரை நாடு கடத்த முயற்சித்த பெண் உட்பட மூன்று பேர் விமான நிலையத்தில் கைது
மலேசியாவில், இலங்கையரை கடத்த முயற்சியில் ஈடுபட்டதாக பெண் உட்பட மூன்று பேர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
27 வயதுடைய ஜி.சாந்தியா தர்ஷினி என்ற மலேசிய பெண், 46 வயதுடைய ஜனார்த்தனன் அப்புப்பிள்ளை என்ற மலேசியர் மற்றும் 48 வயதுடைய விதீவரன் பழனி என்ற இலங்கையர் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மலேசிய நீதிமன்றத்தில் நேற்றைய தினம் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களான மூன்று பேரும் கடந்த ஜுலை 10 ஆம் திகதி கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தின் முனையம் வழியாக இலங்கைத் தமிழர் ஒருவரை கடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மூன்று பேர் கைது
இந்த வழக்கில், 21 வயதான இலங்கையர் அன்டனி சுஜன் அன்டனி ரஞ்சன், கோலாலம்பூர் விமான நிலையத்தில் வேறு ஒருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பிரிவு 26E இன் கீழ் அவர் மீதான குற்றச்சாடுகள் முன்னைவக்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டிற்கு அமைய 7 முதல் 15 வருடங்கள சிறைத்தண்டனை, 500,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
இதேவேளை, குறித்த மூவர் மீது, 2007 ஆம் ஆண்டு ஆட்கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம் கீழ், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 34 உடன் சேர்த்து பிரிவு 26C இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



