நகர அபிவிருத்தி திட்டத்தில் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 4 பிரதேசங்கள் தெரிவு
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் திருகோணமலை மாவட்டத்தில் 4 பிரதேசங்கள் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட உள்ளதாக கிழக்கு மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நகர அபிவிருத்தி கரையோர பாதுகாப்பு கழிவுப்பொருள் அகற்றுகை மற்றும் சமுதாய தூய்மைப்படுத்துதல் இராஜாங்க அமைச்சினால் மேற்கொள்ளப்படவுள்ள 100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய், பதவிசிரிபுற, புல்மோட்டை மற்றும் சேறுவில போன்ற பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்பட உள்ளதாக கிழக்கு மாகாண நகர அபிவிருத்தி அதிகார சபையின் அத்தியட்சகர் எல். ஜே. லியனகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக நாட்டில் 100 நகரங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் இவ்வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் திருகோணமலை மாவட்டத்தில் நான்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில புலன் அத்துகோரலவினால் ஜனாதிபதியிடம் விசேட வேண்டுகோள் விடுக்கப்பட்டதையடுத்து திருகோணமலை மாவட்டத்தில் 4 பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இத்திட்டம் தொடர்பிலான அனுமதி கிடைத்தமை தொடர்பிலான கடிதங்களின் பிரதிகளை
மாவட்ட அரசாங்க அதிபர், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.






16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 21 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
