யாழில் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரண்டு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாண நகர் பகுதியில் உள்ள ஹாட்வெயர் விற்பனை நிலையம் ஒன்றினை உடைத்து ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் மற்றும் நாவாந்துறை பகுதி ஒன்றில் வீட்டை உடைத்து சில பொருட்களும் திருடப்பட்டுள்ளன.
இவர்கள் யாழ்ப்பாணம் பொம்மை வெளியைச் சேர்ந்தவர்கள் என யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருப்பட்ட பொருட்கள் மீட்பு
கைது செய்யப்பட்டவர்கள் 24 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை விசாரணைகளின் பின் நீதிமன்றத்தில்
முற்படுத்துவதுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
98வது ஆஸ்கர்.. சிறந்த சர்வதேச திரைப்பட பிரிவில் தேர்வாகியுள்ள ஜான்வி கபூரின் 'ஹோம்பவுண்ட்' படம்.. Cineulagam