ஜனாதிபதியின் பங்கேற்புடன் மன்னாரில் நடைபெறவுள்ள 39 ஆவது தேசிய மீலாதுன் நபி விழா
மன்னாரில் நடைபெறவிருக்கும் 39 ஆவது தேசிய மீலாதுன் நபி விழாவில் ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்க உள்ள நிலையில் அதற்கான மீளாய்வுக்கூட்டம் நடைபெற்றுள்ளது
மன்னார் மாவட்ட செயலகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முன்னாயத்த கலந்துரையாடலை தொடர்ந்து மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வை.பரந்தாமன் தலைமையில் இவ்விழா சம்பந்தமான மீளாய்வுக்கூட்டம் நேற்று (22.09.2023) நடைபெற்றுள்ளது.
இந்த கூட்டத்தில் மன்னாரில் நடைபெறவிருக்கும் 39 ஆவது தேசிய மீலாத்துன் நபி தின விழாவை நேர்த்தியான முறையில் நடத்துவது சம்பந்தமாக கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றுள்ளது.
மீலாத்துன் நபி தின விழா
குறித்த நிகழ்வானது 9 ஆவது தேசிய மீலாத்துன் நபி முசலி பிரதேச செயலகப்பிரிவில் சிலாவத்துறை முஸ்லிம் பாடசாலை மைதானத்தில் நடைபெற இருக்கும் இவ்விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ள இருப்பதால் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய முன்னேற்பாடுகள் இக்கூட்டத்தில் மீளாய்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ள நிலையில் அதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
மேலும் இக்கூட்டத்தில் முசலி பிரதேச செயலாளர் சிவராஜ், தொடர்புடைய சகல திணைக்கள அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
