3.8 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதி கொண்ட பொருள் அரசுடமை!
3.8 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதி கொண்ட கீரி சம்பா அரிசியை அரசுடமையாக்கி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை கீரி சம்பா அரிசி தொகை கைவசம் வைத்திருந்து இல்லை என்று அறிவித்ததற்காக குற்றவாளியாகக் கண்டறியப்பட்ட வர்த்தக நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
வர்த்தகர் ஒருவர், நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்திற்கு அமைய பொருட்களை கைவசம் வைத்திருந்து அதனை இல்லை என்று கூறி குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால் குறித்த பொருளை நீதிமன்றத்திற்கு அரசுடமையாக்க அதிகாரம் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் கொழும்பு 12 பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில், நுகர்வோர் விவகார அதிகாரசபை நடத்திய சோதனையின் போது இந்த அரிசி இருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கடந்த மாதம் 11 ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இந்த விடயம் தொடர்பாக வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் மற்றும் முகாமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரசுடமை
அதன்படி, மேற்கண்ட நபர்கள் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி குற்றத்தை ஒப்புக்கொண்டதால் நீதிமன்றம் ஒவ்வொருவருக்கும் தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்தது.
வர்த்தக நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கிராம் அடங்கிய 3,000 கீரி சம்பா பொதிகளையும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்தல் மற்றும் மறைத்தல் குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை தொடர்ந்து சோதனைகளை நடத்தும் என்பதோடு, சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி மீது விசேட கவனம் செலுத்தவும், சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாசா விண்வெளி வீரரின் உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கவலை: புதிய புகைப்படத்தால் அதிர்ச்சி News Lankasri

எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுத்த இன்னொரு பிரபலம்.. யார் பாருங்க, இனி தெறிக்க போகுது Cineulagam
