37 ஆவது வருட நிறைவை முன்னிட்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வவுனியாவில் இருந்து புறப்பட்டது!
தியாக தீபம் திலீபனின் 37 ஆவது வருட நினைவு தினத்தை முன்னிட்டு தியாக தீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வவுனியாவில் இருந்து வடக்கு நோக்கி இன்று (24) புறப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபைக்கு முன்பாக அமைந்துள்ள பொங்கு தமிழ் நினைவுத் தூபி முன்பாக இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வையடுத்து திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வவுனியாவில் வலம் வந்து அங்கிருந்து ஏ9 வீதியூடாக வடக்கு நோக்கி புறப்பட்டுள்ளது.
மலரஞ்சலி
இதன்போது, திலீபனின் திருவுருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டதுடன், மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னனனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர், மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.


ஐரோப்பாவில் ரத்தான நூற்றுக்கணக்கான விமானங்கள்... வெளிநாடுகளில் சிக்கிக்கொண்ட குடும்பங்கள் News Lankasri
வாடகைக்கு வீடு பார்க்க சென்ற தம்பதி: கடித்து குதறிய பிட்புல் நாய்: அதிர்ச்சியூட்டும் காட்சி News Lankasri