வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 37 வயதான நபர் திடீர் மரணம்
காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக காலி துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் காலி கட்டுகொட பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் ஆகும். குறித்த நபருக்கு நேற்று இரவு காய்ச்சல் ஏற்பட்டமையினால் கராப்பிட்டிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam