முல்லைத்தீவு பகுதியில் பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கை (Photos)
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட தேராவில் கிராமத்தில் வசிக்கும் குடும்பங்களில் 37 குடும்பங்களுக்கு வீடும் இல்லை காணியும் இல்லாத நிலை காணப்படுவதாக கிராம அபிவிருத்தி சங்கம் தெரிவித்துள்ளது.
தேராவில் கிராமத்தில் 347 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.
இந்த நிலையில் புதிதாக பலர் திருமணம் செய்து குடும்பங்களாக பதிவினை மேற்கொண்டு வந்துள்ளார்கள்.
அரச அதிகாரிகளிடம் கோரிக்கை
இவ்வாறு கைக்குழந்தைகளுடன் வீடும் இல்லாத நிலையில், பெற்றோர்களின் மற்றும் உறவினர்களின் வீடுகளிலும் சிறு கொட்டகைகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள்.
இவ்வாறு காணியும் இல்லாத நிலையில் வீடும் இல்லாத நிலையில் 37 குடும்பங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த குடும்பங்களுக்கான காணிகளையும் வீட்டுத்திட்டங்களையும் அரசாங்கம் வழங்க வேண்டும் என கிராம மட்ட அமைப்புக்கள் அரச அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
மக்களுக்கு குடிதண்ணீர் பிரச்சினை
மணவாளன்பட்ட முறிப்பு கிராமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் நிதி பங்களிப்பில் சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனம் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் ஒழுங்குபடுத்தலோடு கிணறு அமைத்து பொதுமக்களின் பாவனைக்கு இன்று (11.10.2023) கையளிக்கப்பட்டது.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மணவாளன்பட்ட முறிப்பு கிராமத்தில் 40 அடி ஆழம் கொண்ட கிணற்றினை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் (Forum) இணைப்பாளர் அருந்தவநாதன் நிரோஜன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக மாவட்ட செயலாளர் (காணி) சி.குணபாலன் கலந்து கொண்டு கிணற்றின் பெயர்ப்பலகையை நாடா வெட்டி திறந்து வைத்திருந்தார்.
தண்ணீர் வற்றும் நிலை
குறித்த நிகழ்வில் மணவாளன்பட்ட முறிப்பு கிராம அலுவலர் த.தனபால்ராஜ் , பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த பிரதேசத்தில் வறட்சி காலத்தில் தண்ணீர் வற்றும் நிலை காணப்படுவதனால் அதனை நிவர்த்தி செய்ய குடிநீர் விநியோகம் வழங்கி வைக்கப்பட்டு வந்திருந்தது.
இதனை கருத்தில் கொண்டு குறித்த பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் பிரச்சினையினை சீர்செய்யும் நோக்கில் இந்த குடிதண்ணீர் திட்டம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்:பாலநாதன் சதீஸ்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
